முடுக்கப்பட்ட விசை தறிகளாய் ஓட்டம்..
சாவிக்கு ஆடும் பொம்மைகளாய் நினைவோட்டம்..
எதை நோக்கி....எதை நோக்கி...
அர்த்தமுள்ள வாழ்வை..அற்ப பொருட்கள் ஆட்டுவிக்கிறது.
அமைதி உள்ளெ இருக்க அலை அலையாய் ஆர்பரித்து
அதை வெளி தேடும் விந்தை...
மனித மனம் உள்ளெ விரியும் அனிச்ச மலரை முகந்தறிய மறந்து
வெளியே காகித பூக்களில்... வாசனை தேடும் விந்தை..
நான்.....நான் என்ற சொல்லை அகந்தையாய் பார்பது இயல்பு..
நான்.....நான் மட்டுமே எனக்கு என தெரிவது...
அகம் காட்டும் விந்தை..அதுவே..சாஸ்வதமும்..
என்னுள்ளெ என்னை தேடி தேன் துளிகளை சுவைக்க மறந்த மனம்..
என்னை வெளியே தேடி சமுத்திரமாய்..
ப்ரவாகம் எடுக்கும் முயற்சிவிந்தை தான்...ஆனால் வீணே...
Thursday, May 25, 2006
Saturday, May 20, 2006
Subscribe to:
Comments (Atom)